இயற்கையும் செயற்கையும்

பூமியை அன்று அல‌ங்கரித்தன,
மணம் வீசும் பூக்கள்…
இன்றும் அல‌ங்கரிக்கின்றன,
ஆனால் காகிதப்பூக்கள்…
ஏமாந்தன வண்டின‌ங்கள்…

காதல் கவிதை

தினம் தினம் நான்
உன்னை மற‌க்க நினைக்கிறேன்
உன் நினைவுகளை அழிக்கத்துடிக்கிறேன்
உன் குரல் கேட்கக்கூடாது என்பதற்க்காக செவிகளை செவிடாக்குகிறேன்
உன் பெயர் உச்சரிக்கக்கூடாது என்பதற்க்காக மெளனமாக இருக்கிறேன்

இவை அனைத்தும்
நான் உன்னை வெறுப்பதனால் அல்ல….!!
நீ என்னை வெறுத்து விட்டாய் என்பதனால்….!!

உன்னால் முடியும்பொது
நிச்சயமாய் என்னாலும் முடியும்…!!!

உழைப்பு

“உழைப்பு உழைப்பு உழைப்பு
இதுவே நம் உயிர்துடிப்பு
இக்கொள்கை கொண்டு வாழ்ந்தால்
சரித்திரதில் நமக்கு உண்டு மதிப்பு…”